ஆஹா.. அருமை..த்தூ….நாய்களா….
YSR ரெட்டி மறைவும், மீடியாக்களின் பதிவும்
காலைல வீட்ல இருந்து கிளம்பும் போது ஆந்திர முதல்வர் YSR ரெட்டி யை இன்னும் தேடி கொண்டிருந்தார்கள். ஆபீஸ் வந்து சேரும் போது விபத்தில் இறந்த செய்தி Flashnews ஆக ஓடிக் கொண்டிருந்தது.
எல்லா நியூஸ் சேனல் களிலும் இது தான். அழுகை. ரொம்ப கஷ்டமா சேனல் மாத்தினால் சன் மியூசிக் இல் எந்த சுவடும் தெரியாமல் பாட்டு ஓடி கொண்டிருந்தது. இதில் ஆச்சர்ய பட எதுவும் இல்லை. மும்பை தாக்குதலின் போதேஅய் ” உங்க வீட்ல உருளைகிழங்கு பொரியலா !? நானும் வரவா ” என்று கொஞ்சி கொண்டிருந்தார்கள்.
ஆனால், கொடுமையே தெலுகு சேனல்கள் பக்கம் போன போது தான். இதோ, இப்பொழுதும், TEJA TV இல் டயல் எ காமெடி ஓடுகிறது. ETV TELUGU இல் “மகாருசி” சமையல் நிதல்சியில், பிரட்-ன் மீது பட்டர் தடவி சமையல் குறிப்பு ஓடுகிறது.
ஜெமினி மியூசிக் சேனல் இல் லேடீஸ் சாய்ஸ் , போன் பண்ணி காதலை சொல்ல சொல்லுகிறார்கள். கீழே, ” Swathi : Rajakunta, I love U Ra Bangaram ” என்று SMS வேறு. ஆனால் ஒரு சக்ரோல்லிங் செய்தி கூட இல்லை.
த்தூ… நாய்களா….. உங்களுக்காக உழைத்த உங்க முதலமைச்சர் செத்துட்டாருடா.. Machine அதுவா ஓடுதா.. நிப்பாட்டி ஒரு அஞ்சலி நிதழ்ச்சி அரை நாளுக்கு கூடவா போட கூடாது.
இவர்கள் சொல்வது என்னவென்றால், அதுக்கு தான் நியூஸ் சேனல் வச்சிருக்கோம்ல ,அங்க போட்ரோம்ள.
ரொம்பவே மாறிகொண்டிருக்கிறோம்.
பெனசிர் குண்டு வெடித்து அடுத்த நிமிடங்களில், முதல செய்தி புதைபடங்கள் என போட்டிருந்தார்கள். குண்டு வெடித்த பொது அருகில் இருந்த Photographer எடுத்தது.
அதன் கீழே Rate THIS STORY என அஞ்சு ஸ்டார் போட்டிருந்தார்கள். அவ்ளோ தான் மனிதநேயம்.
- Suruttai