‘அப்புறம்
இந்த நாய்க்கும்
நமக்கும்
என்னங்க வித்தியாசம்?’
‘ஒழுக்கமானாலும்
அதை
திணிப்பது கொடுங்குற்றம்’
என்ற
எனது கூற்றுக்கு
நண்பர் குரைத்தது.
ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பியதால்
அவரது
நாய்க்கு கிடைத்தது
ஒரு அறுவை சிகிச்சையும்
முக்திப் பார்வையும்.
இர.ஜெ.பிரேம்குமார்