A l i e n s !

July 6, 2009

ஆனால், போராடியது? – By Surrutai

மேல இருக்கிற இந்த படத்தை சுருட்டைக்கு பார்வர்ட் செய்ததன் விளைவுகள்.

__________________________________________________________________________________________

டேய்,

என்னடா இது? யார் அனுப்புனது…?

“அப்பன கொன்னுட்டு பிள்ளைக்கு தாலாட்டா?”-னு ஜெகத் கஸ்பர் நக்கீரன்ல எழுதின மாதிரி.. அந்த அளவுக்கு மானக்கேடா போச்சா தமிழ்ச்சாதி?

இறுதிநாள் படுகொலைகளையும், கொடுஞ்செயல்களையும், மூடி மறைக்கவும், மறக்கடிக்கவும், ஈழப்போரின் அடுத்தகட்ட நகர்வை நீர்த்துப் போகவும் செய்கிற விதைகளோட, கண்கட்டி ஏமாத்துற, ‘இந்தியன் ரா’வுடன் இலங்கை சிங்களஅரசு பெரும் சதித்திட்டத்தில், பல தலைகளை பணத்தாலும், பிறவற்றாலும் வீழ்த்திவிட்டது. வழுதி, புதினம்.காம், செல்லா, அனிதா பிரதாப் வகையறானு தமிழ் சைடுல இருந்து வர்ற தகவல்களையே மறு வாசிப்புக்கும், பூரண விசாரணைக்கும் முன்வைத்து படிக்கவும். தவிர்ப்பது நல்லது.

இந்த நிலையில, ‘நடந்த எதுவும் எங்க தப்பே இல்ல’, அல்லது, ‘நடந்தது நடந்துருச்சு… இப்போ காப்பாத்த போறதும் நாங்க தான், அதுக்கு நீங்க உதவிபண்ணனும்’-னு கேக்குற இந்த சிங்கள மெயில நீ எப்படி பார்வர்ட் பண்ணலாம்?

இன்றைய சூழ்நிலையில், போர் என்பது, ஆயுதங்களை இறுகப்பற்றி, நெஞ்சு புடைக்க, கண்களில் நெருப்புடன் பாயும் வீரர்களால் நடத்தப்படுவதில்லை.

அரசியல் களத்தில், ஏசி அறைகளில், தொப்பை வயிறுடன், கண்களில் சிரிப்புடன், ஒன்றிரண்டு காபி கப்களை கைகளில் பற்றிக்கொண்டே பேசுபவர்களால் நடத்தப்படுகிறது.

எந்த ஒரு சூழ்ச்சியிலும் விழுந்து விடக்கூடாது. எதிரியை பற்றி நீ என்ன நினைச்சாலும் சரி.. நம் பக்கம் சந்தேகப்படுவது தான் துரோகம்.. அதை இந்த மாதிரி மெயில்களே செய்து விடும். ஏமாத்துறாங்கடா. 200-300 கோடி நெட்ல பொய் பிரசாரத்துக்கு மட்டும் செலவழிக்கிறாங்க.

பார்த்து பண்ணு.

ஜெயகுமார்க்கு இதுல என்ன கருத்துன்னு தெரியலை.

எப்பொழுதும் நம் நிலை இதுதான். மாற்று கருத்தில்லை.
இவ்ளோ பரிதாபமா, போட்டோஸ் செலக்ட் பண்ணி, போஸ்டர் டிசைன் பண்ணி அனுப்புறவங்க, “வணங்காமன்” கப்பல ஏன்டா திருப்பி அனுப்பனும். பதில் சொல்ல சொல்லு.

டியர்.
சுருட்டை

__________________________________________________________________________________________

டேய்,

இந்த போஸ்டர் இலங்கை அரசு அடிச்சது இல்லை. அங்க உள்ள சிங்கள சமூகநல அமைப்பு ஒன்னு அடிச்சது.

சிங்கள மக்கள்ளலேயும் நெறைய பேரு ராஜபக்சேவை வெறுக்கிறாங்களாம். ஒரு சிங்கள எழுத்தாளர் அவரோட பிளாக்-ல எழுதி இருந்தாரு –

“In the Buddhist soil so much blood. You are calling for celebration when the wounds of our country people are not cured yet. How come I will eat milk rice for this Celebration?”

அங்கேயும் மிதவாத குரல்கள் ஒலிச்சிட்டுத் தான் இருக்கு.. ராஜபக்சே ஒரு elected monarch-னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க..

அன்புள்ள,
பிரேமு

__________________________________________________________________________________________

ஆனா, அது ரொம்பரொம்ப குறைஞ்ச எண்ணிக்கை தான்.

இங்கவும் சு.சாமி, காங்கிரஸ் நாய்ங்க இருக்குல்ல, ‘ராஜபக்சே அதெல்லாம் நல்லாத்தான் பண்றாரு’-னு சொல்லறதுக்கு. அது மாதிரி சின்ன அளவுல தான்.

நடேசனோட மனைவி ஒரு சிங்களவர் தான்.

ஆனா நடேசனோட அவரையும் சுட்டுட்டாங்க.

இன்னும், இந்த மாதிரி கேள்வி கேட்டாலே, அவங்க வீட்டுக்கு முன்னாடி வெள்ளை வேன் வந்திரும். இல்ல, புலி ஆதரவாளர் முத்திரையோட ஜெயில்ல வாழ்கையை கழிக்க வேண்டியதுதான்.

ஆனா பெருவாரியான சிங்களர்களுக்கு இதை ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாவும் தான் நினைக்கிறாங்க. புத்த பிட்சுகளே கொடியோட கத்திட்டுதான் இருக்காங்க.

நடு ராத்திரி 1.30-க்கு தமிழர் வீட்டு கதவ தட்டி, பால் சோறு தின்னு-னு ஊட்டிவிட்டு சிரிக்கிறாங்க.

ஒரு சிங்கள பெண் சொன்னது, ‘இனி, அவங்களுக்கு செவப்பு கொடியெல்லாம் இல்ல, இனி எப்பவும் கருப்புக்கொடி தான்’.

இதுல நம்ம ரொம்பத்தெளிவா ஒன்னு எப்பவுமே பண்ணிட்டு இருக்கோம்.

ஒருத்தன் இன்னொருத்தன கொல்றான். ‘அது தப்பு. மிருகத்தனம்’-னு சொல்லி, சண்டை போடுற ரெண்டு பேருக்கும் வெளியே தனியா ஒரு நிலையில இருந்து பாக்குற குணம், அறிவாளிகளோடது’-ன்ற மாதிரி.

சத்தியமா, நான் எப்பவுமே அப்படித்தான் இருந்திருக்கேன். அது நான் வளந்த school , படிச்ச காந்தி-னு… ஆனா, தப்பு பண்றவன்னு நினைச்சா அவன எதிர்த்து நிக்குறவங்க கூட சேர்ந்ததே இல்லை.

எல்லா, புத்திசாலிகளும், பிறப்பால் உயர்ந்தவர்களும், வளர்ப்பில் சிறந்தவர்களும், மனித நேயம், மனித உரிமைனு பேசுற நிறைய படித்தவர்களும், ஐ.நா சபை என எல்லாரும் இந்த கடவுள் மனநிலைக்கு போயிறோம். பேப்பர் படிக்கிறோம். உச்சு கொட்டுகிறோம்.

ஞானிகள், எழுத்தாளர்கள், நிருபர்கள், TV analysts… சமூகம் தாண்டி நம்மள ஒரு virtual நியாய பூமினு செட் பண்ணிட்டு அங்க இருந்து பகிர்ந்துக்கிறோம்.

‘சே குவாரா’வுக்கு இத தாண்டி வர, ஒரு மோட்டார்சைக்கிள் பயணமே போதுமானதாக இருந்தது. ஆற்றுக்கு மறுபக்கம் போக அவர் ஆற்றிலே குதிக்கிற இடம்தான் – சமகால ரத்தமும் சதையுமான சகமனிதர்களுக்கான வாழ்வியலில் தன்னை இணைத்துக் கொள்ள போராட்டத்தில் குதித்த நேரம். அது தன்னை கடவுள், அறிவாளி, மேன்மை தாங்கியவன்னு நினைச்ச நிலையிலேயிருந்து, மாயையில இருந்து, விடுபட்டு தான் மனிதன்தான்னு நிரூபிச்ச இடம்.

அதுல இருந்து அவர் பின்வாங்கவே இல்லை.

அதனால தான், அவருக்கு பதவி வந்தபோதும், நிர்வாகம், ஆளுமை, மறுபடி மக்கள் வணங்கும்படி கடவுள்நிலைனு உணர்ந்து ஒதுக்கி இறுதிவரை மனிதனாகவே வாழ்ந்து மடிந்த உத்தமன்.

தமிழீழத்தில் பிரபாகரனைவிட தைரியசாலிகளும், ஆன்டன், தமிழ்ச்செல்வனைவிட புத்திசாலிகளும் இருந்தார்ர்கள். இப்பொழுதும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். போர்த் தந்திரங்கள், திட்டங்கள் குறித்து விவாதிப்பார்கள், தப்பெது, சரியெது சொல்வார்கள்.

ஆனால், போராடியது?

டியர்.
சுருட்டை

4 Comments »

  1. அதேன் , ஐயா 500 கோடி ரூபா வாங்கிக் குடுத்துட்டாருல , சரி பண்ணிருவாய்ங்க.
    இனமான தூண் ஐயா இருக்க வரைக்கும் யாரும் தமிழன அசைக்க முடியாதுப்பூ !!

    Comment by Vivek — July 7, 2009 @ 12:46 pm | Reply

  2. ‘ஐயா’-னு வர்ற இடமெல்லாம் ‘ங்கொய்யா’-னு போட்டு படிச்சா ஒரு அல்ப சந்தோசம்..!

    அந்தாளு செத்தாகூட யாரும் அழக்கூடாது விவேக்கு.

    Comment by RJP — July 7, 2009 @ 1:25 pm | Reply

  3. சுருட்ட பாஸ் இப்படி புலம்புறதுக்கு பதிலா , அந்த தமிழர்களுக்கு எதாவது பண்ணலாமே !! ( (மீடியா’ல இருக்கீங்க பல பேரோட contacts இருக்கும் ) , அப்படி எதாவது பண்ணுன சொல்லுங்க என்னோட பங்களிப்பு நிச்சயமா இருக்கும் .

    Comment by Vivek — July 8, 2009 @ 4:07 am | Reply

  4. //அரசியல் களத்தில், ஏசி அறைகளில், தொப்பை வயிறுடன், கண்களில் சிரிப்புடன், ஒன்றிரண்டு காபி கப்களை கைகளில் பற்றிக்கொண்டே பேசுபவர்களால் நடத்தப்படுகிறது//

    உண்மை தான்.

    //ஞானிகள், எழுத்தாளர்கள், நிருபர்கள், TV analysts… சமூகம் தாண்டி நம்மள ஒரு virtual நியாய பூமினு செட் பண்ணிட்டு அங்க இருந்து பகிர்ந்துக்கிறோம்.//

    இதுக்காகவே தோள்ல துண்டைப் போட்டுட்டு, தீர்ப்பு சொல்ல காத்துக்கிட்டு தானே இருக்கோம். :(

    Comment by பாலகுமார் — July 16, 2009 @ 9:29 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.