“காந்தி சுடப்பட்ட போது ‘ஹே ராம்’ என்று சொன்னாரா..? பாருங்கள், விஜய் டிவியின் ‘குற்றம் நடந்தது என்ன?’ என்று அப்பப்போ விளம்பரப் படுத்தியதால் கொஞ்சம் ஆர்வமாகி அந்த நிகழ்ச்சியை விரட்டி இணையத்தில் பார்த்தேன்.
கமல் வேற இந்த மேட்டர சொல்லறதுக்காகவே ஒரு படம் எடுத்தாரே, இவங்கே என்ன சொல்றாங்கே-னு பாக்கலாம்-னு ஹெட் செட் எல்லாம் டைட்டா மாட்டி ஆரம்பிச்சேன்.
கோபி நாத் பில்ட்-அப் கொடுத்து செருமினார். காந்தி சுடப்பட்ட போது ‘ஹே ராம்’ என்று சொன்னாரா?- அவரது காரியதரிசி கல்யாணம் தரும் அறிய தகவல். கோடை காலம் குழந்தைகளின் எமன் ஆகிறதா? - ஒரு பார்வை, என பல தகவல்களுடன் தயாராய் இருந்தார்.
திரு.கல்யாணம் அவர்கள், காந்தியிடம் எப்படி வேளைக்கு சேர்ந்தார். டைப் ரைட்டிங் எந்த அளவுக்கு அருமையாய் அடித்து காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரானார், இன்னும் காலையில் எழுந்தவுடன் காலையில் தெருவையே சுத்தம் செய்து, தனது வீட்டையும் சுத்தம் செய்கிறார் அவர் என்று காந்தியவாதியின் எளிமையை விளக்கினார்கள். அதோடு நிற்காமல் அதை படமாக வேறு காட்டினார்கள். பாவம் அந்த எண்பது வயது பெரியவரை வைத்தும் காசாக்கும் நோக்கில் இருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். இதை சொன்னால் யாரும் மறுக்க போவதில்லை. அதையும் காட்சிப்படுத்த முயலும்போது ஒரு அசிங்கமான செயற்கைத்தனம் தொற்றிகொள்கிறது. அவர் அரை டிரௌசருடன் நடுங்கிக் கொண்டே ஒட்டடை அடித்தார்.
ஒரு வழியாய் அவரை பேசுவதற்காக உட்கார வைத்தார்கள்.
“காந்தி உண்ணாவிரதம் இருந்து வல்லபாய் படேல் அவர்களை பாகிஸ்தானுக்கு ஐம்பது கோடி ரூபாய் நாட்டின் புனரமைப்பிற்காய் கொடுக்கச் சொன்ன போது, நாட்டில் நிறைய ஹிந்துத்வா அமைப்பினருக்கு அது பிடிக்கவில்லை. காந்தி ஒருதலை பட்சமாக செயல்படுவதாய் எண்ணிக்கொண்டு அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர். அப்போது பிராத்தனை கூட்டத்திற்கு..”
கோபிநாத் திடீரென தோன்றினார், “காந்தி சுடப்படும் போது ‘ஹே ராம்’ என்று சொன்னாரா?” என தொடர்ந்து பார்க்கும் முன்னாடி சிறிய விளம்பர இடைவேளை. தொடர்ந்து பாருங்கள்.
இவங்கே காந்தி பத்தி பீல் ஆகுறாய்ங்க. ஹ்ம்ம்.. எல்லாம் நேரம். ஆபாச படத்துக்கு முன்னாடி கொடுக்கிற பில்ட்-அப் மாதிரி தான் இருந்தது. காந்தியையும் காசு பண்ண வைத்ததை விட காந்தியவாதியை நடிகனாக்கிய விதம் இன்னும் இழிவானது. என்ன செய்ய..? பார்த்துதானே ஆகணும். கமல் வேற உணர்ச்சிவசப்பட்டு யாருக்கும் புரியாம எதையோ தெளிவா பேசினானே, இன்னைக்கி தெரிஞ்சுகாம விடக்கூடாதுன்னு பார்த்தேன்.
“காந்தி 1948, சனவரி மாதம் 30 தேதி, பிராத்தனை கூடத்துக்கு போறப்போ கோட்சே வந்து காந்தியை காலை தொட்டு வணங்கி நிமிர்ந்த உடனே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டான். சுடப்பட்ட உடனேயே காந்தி பின்னால் விழுந்து விட்டார். எதுவும் சொல்லவில்லை. நான் அவருக்கு பின்னால் வெகு அருகில் நின்று கொண்டிருந்தேன். ஆனால் சில பேரு சொல்லறாங்க அவரு ‘ஹே ராம்’னு சொன்னதா. எனக்கு அப்படி எதுவும் கேக்கலை. ஒரு வேலை பின்னாடி நின்னதால காதுல சரியாய் விழலையோ என்னவோ..?”
அட ஆண்டவா, இந்த கேப்ல நான் ‘மரியாதை’ பாட்டாச்சும் பார்த்திருப்பேன். பாட்டெல்லாம் நல்லா வந்திருக்கு-னு கேப்டன்-னே சொன்னாருப்பா.
இர.ஜெ.பிரேம்குமார்
பிரிச்சுட்ட பிரேம்.
கொஞ்சம் நம்மளும் பொறுத்துக்க தான் வேணும். மிச்சம் இருக்குற 20,30 காந்தியவாதியும், 300 தியாகிகளும் இருக்குற வரைக்கும். இந்த நவயுக சத்திய புருசர்களின் (ஆமா, சொல்ற எல்லாமேபட்ட உண்மையள.. பேப்பர், டிவி, ரேடியோ மூணுலேயும் சேர்ந்த வாக்குல, இன்னைக்கு சனிகிழமை-னு சொன்னா, எண்ணெய் முழுகுற நிலைமைல தானப்பா நம்மலும் இருக்கோம். இவன் சொல்ற ஆளுதான் தீவிரவாதி, இவன் சொல்றது தான் உண்மை , சத்தியம்.) செய்தி, பகுத்தறிவு செய்திகளை நம்புறதும், விளம்பர இண்டெர்வல் கூட விடாம பாக்குறதும் தான், 21ம் நூற்றாண்டு இந்தியாவின் கடமை, கண்ணியம்.
19 வருசமாச்சு, சன் டிவி க்கு.
காந்தி சொன்னது வாய்மையே வெல்லும். இனி என்றும் மீடியாவே வெல்லும்.
நம்ம அடையாளம் போச்சு. அறிவு, இலக்கியம் மொத்தமா மழுங்கி போச்சு . விளையாட்டு, கற்பனை, உடல் உழைப்பு, எல்லாம் போச்சு.
வீரம் போச்சு. ஜல்லிகட்டும், அழகர் திருவிழாவும் டிவி-ல பக்கதுல காட்டுறப்போ. கோவிந்தா..கோவிந்தா..
அதே டிவியால ,சக மனிதன் மேலான அக்கறை போச்சு.
கட்ட கடைசியா… கண்ணு முன்னாடி, நம்ம ரத்த உறவ,பெண் பிள்ளைங்கள கதற வைக்கிறான். கற்பழிக்கிறான்.. அதையும் டிவி-ல கண்ணை பொத்தி இடுக்கு வழியா பாக்குறோம்.
ஆண்மையும் போச்சு.
வாழ்க டிவி யுடன்.
Comment by சுருட்டை. — May 12, 2009 @ 1:36 pm |