A l i e n s !

April 20, 2009

ஸ்டேட் ஆப் ப்ளே : விமர்சனம் – By RJP

Filed under: Cinema, Tamil — Aliens @ 6:50 pm
Tags: ,

ஆங்கில படங்களுக்கு தமிழ்ல விமர்சனம் எழுதலாமே-னு கொஞ்ச நாளா ஒரு ஆதங்கம் இருந்துச்சு. அத தீர்த்து வைக்கிற மாதிரி எனக்கு அமைஞ்ச படம் தான் “ஸ்டேட் ஆப் ப்ளே”. ரசல் க்ரோ படமாச்சே-னு ஆசை ஆசையா தான் போனேன். தியேட்டர்-ல நல்ல கூட்டம். என்னைய மாதிரியே நெறைய பேரு நெனச்சு வந்திருந்தாங்க போல. ஹாலிவுட்-னாலே நெறைய நல்ல நாவல்களை படமாக்குவாங்க. தமிழ் சினிமா மொதல்ல மாறனும்-னா அது இந்த எடத்தில தான். திரைக்கதை ஆசிரியர்கள் நெறைய படமாக்கக்கூடிய நாவல்களை படிக்கணும். தமிழ்ல நல்ல நாவல்களுக்கு பஞ்சமே இல்லை. தேடிக் கண்டிபிடிச்சு திரைக்கதை மட்டும் எழுதினாலே போதும். இன்னும் ஒரு நூறு வருஷம் நல்லா அவிச்சு சாப்பிடலாம். ஆனா இங்க கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-னு பெயர் போட்டுக்கலைனா நல்லா படைப்பாளி இல்லைன்னு நெனச்சிருவாங்களோ-னு ஒரு நெனப்பு இருக்கு. பாரதிராஜா, மஹேந்திரன் மாதிரி சில இயக்குனர்கள் அதை தொட்டுப்பார்த்தும் நெறைய பேரு நானே எல்லாம் பண்ணிறேனே-னு ஆரம்பிச்சதோட தொடர் நிகழ்வு தான் மேற்கத்திய படங்களை தமிழ் மயமாக்கத் தொடங்கியது.

சரி,  இந்த ”ஸ்டேட் ஆப் ப்ளே” படம் அப்படி ஒரு நாவலை தழுவியது அல்ல. பிபிசி தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரைத் தழுவி எடுக்கப்பட்டது. ஆறு மணி நேரம் ஓடக் கூடிய அந்த தொலைக்காட்சி தொடர், இரண்டு மணி நேர படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் பிராட் பிட் நடிப்பதாய் இருந்ததாம். கடைசி நேரத்தில் அவர் விலகிக்கொள்ள அந்த வாய்ப்பு க்ரோவுக்கு கிடைத்ததாம். இந்த படத்தின் கதை – அரசியல்வாதி (அமெரிக்க மொழியில் – செனட்டர்/காங்கிரஸ்மேன்), பத்திரிக்கை புலனாய்வு நிருபர் இருவரும் கல்லுரி நண்பர்கள். அரசியல்வாதியின் தோழி (மனைவி அல்ல) மர்மமான முறையில் ரயிலுக்கு காத்திருக்கும் போது கொல்லப்படுகிறார். அவர் இறந்தது எந்த சிசிடிவி கமேராவிலும் பதிவாகாத இடத்தில் நிகழ்ந்ததால் தற்கொலை என நம்பப்படுகிறது. ஆனால் நம்ம ஹீரோ மட்டும் சந்தேகப்பட்டு விடாமல் உண்மையை துரத்த பல மர்மங்கள் வெளியாகிறது. நம்ம நாட்டு கார்கில் சவப்பெட்டி ஊழல், போபர்ஸ் ஊழல் மாதிரி அவங்க ரேஞ்சுக்கு ஆப்கானிஸ்தான் போரில் பாதுகாப்புக்கு துறையில் ஊழல் நடந்ததாகவும் அதில் அந்த கொலையான பெண் உளவாளி எனவும் கதை போகிறது. மொத்தத்தில் விஜயகாந்த் கதை.

எடிட்டிங், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை எல்லாம் இப்போ வர எல்லா படத்திலயும் எல்லாருமே ஓரளவுக்கு நல்லா பண்ண ஆரம்பிச்சதாலே நம்ம மனசு அந்த உழைப்பில் எல்லாம் லயிக்க தயாராய் இல்லை. படத்தின் டிரைலர் பார்த்தாலே கொலைகாரனை யூகிக்க இயலும் கதையை வைத்துக்கொண்டு முயற்சி செய்திருந்தாலும், அப்பழுக்கற்ற நடிப்பால் படத்தின் பலமாய் இருப்பது ரசல் க்ரோ. அப்றோம் இன்னொரு பிளஸ் சொல்ல வேண்டுமானால் அமெரிக்க பத்திரிகையாளனின் வாழ்வும், பத்திரிக்கை ஆபிஸின் நிலையும். சிரிப்பு, அழுகை, கோபம், உவகை மாதிரி உலகம் முழுவதும் மாறாமல் ஒரே மாதிரி இருப்பது ஒரு பத்திரிகையாளளின் அலுவலகம். சென்னையில் நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசுவின் பேப்பர் மண்டிய அலுவலகம் தான் உடனடியாக நினைவுக்கு வந்தது. அதே போல மாறாத மற்றொரு விஷயம் ஒரு அரசியல்வாதியின் வாய்ஜாலம். இந்த இரண்டு உலகத்தையும் நட்பின்வழி இணைக்கிறார்கள்.

“வாஷிங்டன் போஸ்ட்” என்னும் பத்திரிக்கை அலுவலகத்தை முன்மாதிரியாக கொண்டு செட் வடிவமைக்கப்பட்டது என்பதால் என்னுடைய கவனம் எல்லாம் அந்த பத்திரிக்கையாளர்களின் இயக்கம் மீதே இருந்தது. படத்தில் அந்த செய்தித்தாளின் பெயர் “வாஷிங்டன் க்ளோப்”. திரில்லர் போன்று நகர்த்த முயற்சி செய்த இந்த படத்தில் ஹீரோ வில்லனின் மீது திடுக்கென சந்தேகம் வர காரணமாய் இருப்பது – “நான் அவள் அன்னிக்கு மரிக்கொளுந்து செண்டு தான் போட்டிருந்தாள் என்று சொல்லவே இல்லையே, உனக்கு எப்படி தெரிந்தது?” என்ற செந்தாமரை காலத்து வசனமும், அதற்கு சிவாஜி காலத்து உதடு கடித்தலும் [அறியாம சொல்லிட்டாங்கலாம்]. எத்தனை கதை வந்தாலும் இந்த மாதிரி ஒரு சில விஷயங்களை மாத்த மாட்டாங்கே போல.

ரசல் க்ரோ ஏன் இப்படி பன்னி மாதிரி குண்டானான்னு தெரியலை. ஒரு வேலை கதாபாத்திரத்துக்காக இப்படி மாறிட்டானோ? அடுத்த படத்தில தெரிஞ்சுரும். படத்தில கடைசியா டைட்டில் ஓடுறப்போ ஹீரோ கொடுத்த செய்தி எப்படி அச்சில் ஏறுகிறதுனு காட்டிருப்பாங்கே. அந்த காட்சி கோர்வை அழகு. மத்தபடி, இது மாதிரி நெறைய பார்த்தாச்சுப்பு..

இர.ஜெ.பிரேம்குமார்

10 Comments »

  1. rendu maninerama? Naan ithae DVD eduthaen 5.30 mani neram potruthaanunga (6 episodes), nalla velai naan paakama apdiye return panniten.

    Comment by Vivek — April 21, 2009 @ 2:07 pm | Reply

  2. ungaloda ponaana nerathai kaapathitten..
    enakku intha nimmathi pothum Viveku.. :)

    Comment by RJP — April 22, 2009 @ 8:31 am | Reply

  3. Good critique in tamil on a english movie.

    Comment by Subramanian — April 23, 2009 @ 10:57 am | Reply

  4. good explanation….but…etha sonnalum nakkal a flow irukku…..

    Comment by dap — April 24, 2009 @ 4:15 am | Reply

  5. ama dap..
    sutti kaatiyathuku nandri !

    Comment by RJP — April 24, 2009 @ 9:40 am | Reply

  6. Its Ok Mr.RJP…..
    Its my kadamai….

    Comment by dap — April 24, 2009 @ 12:15 pm | Reply

  7. இப்போதுதான் இந்த படத்தை San Jose, AMC தியேட்டரில் பார்த்து விட்டு வந்தேன். வந்து திரட்டி-க்கு வந்தால் உங்கள் விமர்சனம். எங்கள் மென்பொருள் வெளியீட்டை முன்னிட்டு அலுவலகத்தில் எல்லோரும் போயிருந்தோம். படம் தொடங்கிய சிறிது நேரத்தில் தூங்கி விட்டேன். அப்புறம் விழித்து பார்த்தேன். பெரிதாக ரசிக்க முடியவில்லை.

    எனக்கு ஆங்கில படங்கள் பற்றி எதுவும் தெரியாது. என்னை கவர்ந்தது அந்த பத்திரிகையாளர் ஹீரோ தான். அவர் கிட்ட அப்படி என்ன தான் இருக்கு என்று தெரியவில்லை. நல்ல நடிப்பு என்று தோன்றியது. அவரது Personality மற்றும் நடிப்பு தவிர படத்தில் எனக்கு வேறு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. உங்கள் விமர்சனம் மூலம் அவர் தான் ரசல் க்ரோ என்ற நடிகர் என்று தெரிந்து கொண்டேன். நன்றி.

    நீங்கள் குறிப்பிட்டது போல அந்த பத்திரிகை அலுவலக கடைசி காட்சி மிக அருமை.

    Comment by மக்குசாமி — April 24, 2009 @ 10:58 pm | Reply

  8. Hmmm… ada pavigala.. ‘muthalvan’ paduthula, first half-nu sollunga…

    Iepadi than, sappa thanama holy wood padam pannuvanga.. BUT WORK iearukum.. antha work thaan yeannuku romba pidikum..

    Comment by Mathes — April 25, 2009 @ 11:37 am | Reply

  9. நண்பர் மக்குசாமி, மாதேஷ்,

    தங்களது வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..!

    Comment by RJP — April 28, 2009 @ 9:41 am | Reply

    • Dear friend RJP…

      Thanx for ur comments and CRITICISM… ;-(

      Am sorry 4 all…

      Comment by Mathes — April 28, 2009 @ 3:22 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.