A l i e n s !

March 14, 2009

படிச்சவங்கே எல்லாம் அரசியலுக்கு வரணும் – By RJP

Filed under: Politics, Tamil — Aliens @ 8:03 am
Tags: , ,

வுண்டமணி சொல்லற மாதிரி இதையே ரொம்பப் பேரு ரொம்ப காலமா சொல்லிட்டு இருக்காய்ங்க. ‘படிச்சவங்கே எல்லாம் அரசியலுக்கு வரணும். அப்படி வந்தா நாடு முன்னேறிடும்’-னு. படிச்சவங்க எப்போவோ அரசியலுக்கு வந்தாச்சு. இதுவரை இந்தியாவில் பிரதமர்களாய் இருந்தவர்கள் அனைவருமே படிச்சவங்கே தான். தமிழ் நாட்டில் ஜாதி அரசியல் செய்கிறவர்களில் ராமதாஸ், சேதுராமன், கிருஷ்ணசாமி எல்லாம் ஒரிஜினல் டாக்டர்கள். படிச்சவனுக்கு தான் பாமரனின் அறிவீனத்தை வைத்து அரசியல் செய்யும் வித்தையெல்லாம் அத்துபடி. ஆக, படிச்சவன் அரசியலுக்கு வந்தா நெலமை சரியாயிடும்-னு நெனைக்கிறதே ஒரு பெரிய மாயை.

அப்புறம் இந்த ஐஐடிகாரங்கே கட்சி ஆரம்பிச்சா நாடு பூத்து குலுங்கிரும்னு நெனச்சாலும் தப்புதான். ஐஐடி-ங்கறது ஒரு புத்தக புழுக்கள் நெளியும் சதுப்புநிலம். ஆனா அங்க தான் நாட்டுக்கு உரம் போடுறவங்க இருகாங்கனும் உறுதியா சொல்லிரமுடியாது. சரி, படிச்சவன்-னா யாரை குறிப்பிடுறோம்? இளங்கலை, முதுகலை பட்டங்களை நல்ல கல்லூரில வாங்கி இருக்கவங்களையா..? முதல் வகுப்பில் தேறியவர்கள் மட்டுமா..?  இல்லை, ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கினா போதுமா..? அரியர்ஸ் வச்சிருந்தாலும் அரசியலுக்கு வரலாமா..? அரசியல்வாதிகளை தரமான கல்லுரிகள் மட்டுமே உருவாக்கும்-னு நெனைக்கிறதும் ஒரு விதமான மாயை. அவர்களும் கலைஞர்கள் மாதிரியே படிப்பின்றியும் உருவாக்கப்படலாம்.

அப்போ யார்தான் அரசியலுக்கு வரவேண்டும்? அதற்கு முன்னாடி -

என்னோட கிராமத்துக்கு போறப்ப எல்லாம் ஒரு சில சித்தப்பாக்கள், மாமாக்கள் “ஏம்பா, உங்கள மாதிரி படிச்சவங்க தானே, நம்ம ஊருக்கு நல்லது கெட்டது நாலும் பண்ணனும், நீங்க இந்த மாதிரி டவுன பக்கமே இருந்தா எப்போ முன்னேற?”னு கேக்குறப்போ, ஒரு மாதிரி உள்ளுக்குள்ள ‘உன்னால் முடியும் தம்பி’ டைட்டில் ட்ராக் கேட்கும். ஆனா அது சென்னை-ல நுழையும் வரைகூட தாங்கினது இல்ல.

நான் என்னோட நண்பர்கள் கூட்டத்தோட பேசுறப்போ சொன்னதுண்டு. நம்மள படிக்க வச்சதுல நம்மளோட பெத்தவங்க மட்டுமில்ல. ஒரு சொந்தக்காரக் கூட்டம், ஒரு தெரு, ஒரு ஊர், ஒரு நாடே இருக்கு. படிக்க செல்லும் வழியில் நமக்கு முன்னாள் விரியும் ஒவ்வொரு காட்சியும் திட்டமிட்டே காட்டப்படுகின்றது – வேகாத வெயில்ல மாடு மாதிரி வண்டி இழுத்துட்டு ஓடுற பெரிய மனுஷன், ஒரு மாசம் கொடுக்காத வட்டிக்கு மானம் போற அளவு நடு ரோட்டுல திட்டு வாங்கிட்டு மலங்க,மலங்க முழிக்கும் காய்கறி விக்கிற அக்கா,  எச்சில் பஜ்ஜி தட்டை, வியாபாரச் சூடறிந்து கழுவிப் போடாத வயதுக்கு வந்த சிறுமியின் சடை இழுக்கும் வியாபாரி – எத்தனையோ ஆயிரம் படிக்கவைக்கவோ, படிக்கவோ வக்கில்லாத மக்களோட பிரதிநிதியாகத் தான் நாம் படிக்கவே செல்கிறோம். அவர்களை எல்லாம் கடந்து செல்ல வைத்த கடவுளின் எண்ணம் இதுவாகத்தான் இருந்திருக்கும் – “உன் முன்னால் இத்தனை இழிவுகள், என்னிடம் சக்தி எல்லாம் வாங்கிக்கொள், முடிந்த வரை மாற்றி காட்டு”. தினமும், நாம் பார்க்கும் இது போன்ற லட்சக்கணக்கான காட்சிகளில் மூன்று மட்டும்தான் தேவைப்பட்டது புத்தருக்கு. “எனக்கு இன்னும் எத்தனை கோடி அவலங்கள்தான் தேவை?” – சவுக்கால் தன்னை அடித்துக்கொண்டே பிட்சை எடுப்பவன் போல, என்னை நானே அடித்துக் கொண்டே அலைகிறேன்.

அப்படியெல்லாம் வக்கனையா பேசிட்டு,  வேலைக்கு வந்ததும், ஆன்-சைட் எப்போ அனுப்புவீங்க, எப்படி அனுப்புவீங்க-னு பலபேரை பலவிதமாய் சோப்பு போட்டு, “கடனை கட்டுறேன், அக்கா, தங்கையை கட்டிக் கொடுக்கிறேன், வீட்ட கட்டுறேன், ரெண்டு வீடா கட்டிறேனே!”-னு ஆசைக்கு ஏதோ அளவுள்ளது போல, எனக்கு நானே காரணங்களை சொல்லி ஏமாற்றி பழகிய பின்னரும் தூங்க முடிவதற்கு காரணம் இன்னும்  எங்கோ அழும் குரல் என்னை இங்கே உலுக்குவதால் தான். அந்த உலுக்கமும் நின்று போனால் உளுத்துப்போக தயாராக வேண்டியதுதான்.

சரி இப்போ அந்த கேள்விக்கு திரும்ப வருவோம். அப்போ யார்தான் அரசியலுக்கு வரவேண்டும்? 

வாழ்கையின் எல்லாச் சூழலுக்கும் விடை தரும் தமிழ் இலக்கியத்தில் புறநானுற்று கவிஞன் பரிதி இளம்வழுதி, உலகம் அழியாமல் இருப்பதற்கான காரணமாய் கூறிய, “தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுனர்”களே நமது அரசியலின் தேவை. அந்த நல்முனைப்பு மட்டும் இருந்துவிட்டால் அரசாங்கத்தை செலுத்தத் தேவைப்படும் அனைத்து அறிவும் வசமாகும்.

படித்தவன் தான் தேவை. ஆனால் அவன் மக்களின் நோயையும், நோயின் மூலத்தையும், அதுதணிக்கும் வழியையும் மெத்தப் படித்தவனாய் இருக்கவேண்டும்.

அடுத்தவருக்காய் கண்ணீர் சிந்திய அந்த அந்தரங்க வேளைகளில் கடவுளின் ஸ்பரிசத்தை நீங்களும் தீண்டியிருப்பீர்கள் தானே? :)

இர.ஜெ.பிரேம்குமார்

9 Comments »

  1. Expecting another KAMARAJ or KARKAN is not possible now. Human is used to loving money a lot. Every body wants to earn in some way or the other. Almost all the common people who blame the politicians, would have some how undergone some kind of involvement into corruption like at least bribing to some body to get some thing done.

    So Any body comes to politics will do some kind of corruption. But probably we can select some of them who does less corruption and who is strong and brave to take proper actions and has a more long term views.

    Take for example, Every body in politics eats people’s money. But It is true that MAYAWATI pays 26 crores as income tax for 2007-08. Which is much more than many millionaire(business men) in india.

    ………..

    Comment by sathish — March 16, 2009 @ 10:14 am | Reply

  2. I dont say MAYAWATI is a right choice for indian ministry to rule. But there are many good people who are still there inside the corrupted politics.

    Manmohan Singh is one of the best fellow in politics. Problem is Sonia is his worst leader. When all such best people come out of the worst alliance and form the party, definitely Student power can help these parties and come out with a great solution…

    Comment by sathish — March 16, 2009 @ 10:18 am | Reply

  3. Lallu is the worst CM in Bihar before. Now he is one of the best minister, because he is able to earn such a huge revenue in Railways………….

    Comment by sathish — March 16, 2009 @ 10:19 am | Reply

  4. Getting a good leader is not so easier…. People like PREM AND SURUTTAI has to think about the country and join politics…..

    Comment by sathish — March 16, 2009 @ 10:20 am | Reply

  5. Mr.சதீஷ் பாண்டியன்,
    போதும்யா..! புல்லரிச்சுகிட்டே போகுது.. எப்போ நிக்குமோனு பயமா இருக்கு..

    ஆனா என்னையும் மதிச்சு அரசியலுக்கு வர சொன்னீல, அத நெனச்சாத் தான் பெருமையா இருக்கு..

    மாயாவதி, லல்லுவை விடு, அந்த கடைசி வரியை மட்டும் could you pls repeatu..? ;)

    Thanks for sharing ur views on current money driven politics..

    Comment by RJP — March 16, 2009 @ 11:27 am | Reply

  6. Hi RJP,
    நல்ல பதிவு ….

    //அப்போ யார்தான் அரசியலுக்கு வரவேண்டும்? //

    நல்ல கொள்கைகளுடன் வருபவர்களும், அரசியலில் நிறைய சமரசம் செய்து கொள்ளும் நிலை தானே இருக்கிறது !

    //அடுத்தவருக்காய் கண்ணீர் சிந்திய அந்த அந்தரங்க வேளைகளில் கடவுளின் ஸ்பரிசத்தை ………. //
    வாழ்த்துக்கள், நிறைய எழுதுங்கள் !

    …பாலகுமார்…

    Comment by பாலகுமார் — March 17, 2009 @ 10:05 am | Reply

  7. பாலகுமார்,

    தங்களது வாசிப்பிற்கும், கருத்துக்கும் நன்றி..!

    உங்களது கவிதைகளை இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்..

    Comment by RJP — March 17, 2009 @ 4:09 pm | Reply

  8. //அவர்களை எல்லாம் கடந்து செல்ல வைத்த கடவுளின் எண்ணம் இதுவாகத்தான் இருந்திருக்கும் – “உன் முன்னால் இத்தனை இழிவுகள், என்னிடம் சக்தி எல்லாம் வாங்கிக்கொள், முடிந்த வரை மாற்றி காட்டு”. தினமும், நாம் பார்க்கும் இது போன்ற லட்சக்கணக்கான காட்சிகளில் மூன்று மட்டும்தான் தேவைப்பட்டது புத்தருக்கு. “எனக்கு இன்னும் எத்தனை கோடி அவலங்கள்தான் தேவை?” – சவுக்கால் தன்னை அடித்துக்கொண்டே பிட்சை எடுப்பவன் போல, என்னை நானே அடித்துக் கொண்டே அலைகிறேன்.//

    - என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள். கோட்டுர்புரம் சிக்னலில் ஒரு முறை காத்திருக்கும்போது தெரு ஓரத்தில் இரு வறிய குழந்தைகளின் நிலையை கண்ட பிறகு என் நிலைப்பாடு பெரிதும் மாறிற்று. அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு தீப்பொறி. அதன் பிறகு பிச்சைக்காரகள் கேட்கும்போது பிச்சை போட ஆரம்பித்தேன் (அதற்கு முன்பு உழைத்து சாப்பிடலாமே என்று மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்). அந்த சம்பவம் நடந்து ஒரு சில நாட்களிலே என் நண்பர்கள் சிலர் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒரு அறக்கட்டளை ஆரம்பித்ததும் நானும் அதில் என்னை இணைத்துக்கொண்டேன். ஒரு பைசா கூட நிர்வாக செலவு செய்யாமல் ஒரு புதுமையான அறக்கட்டளையாக எனது நண்பர்கள் அதை செய்து செய்து வருகிறார்கள். மேலும் விவரம் அறிய http://www.indiasudar.org என்ற வலைத்தளத்தை அணுகலாம்.

    //அப்போ யார்தான் அரசியலுக்கு வரவேண்டும்? //
    இது பற்றிய எனது நிலையை http://karuppuswamy.com/makkupress/2009/04/23/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/ என்ற சுட்டியில் பதிவிட்டுள்ளேன்.

    Comment by மக்குசாமி — April 24, 2009 @ 11:15 pm | Reply

  9. நண்பர் மக்குசாமி,

    தங்களது வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..!

    கண்டிப்பாக உங்களது ஆக்கத்தை படித்துப் பார்க்கிறேன்..

    Comment by RJP — April 28, 2009 @ 9:42 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.