கைதுகள் தொடர்கின்றன. காங்கிரஸ் கட்சியினர் மீதான வெறுப்பு அவர்கள் மீதான தாக்குதல்களாக அத்துமீருகின்றன. தமிழ் நாட்டில் மிக பெரிய மாற்றங்கள் நடந்தேற இருப்பதற்கான அறிகுறிகள் தான் இவையெல்லாம். இதே போன்ற மாற்றங்கள் தான் அண்ணாத்துரையின் திமுக காலுன்ற காரணமாய் இருந்தது. திராவிட அரசியல் வெற்றிகரமாக தமிழகத்தில் வேரூன்றியது. இப்போது அதை வேரறுக்கும் தருணம் வந்துவிட்டது போலும். கருணாநிதியின் அரிதாரம் கரைய தொடங்கிவிட்டது. பட்டிகாட்டு மக்களுக்குக் கூட அவரது தொலைக்காட்சி நிறுவனம், அலைவரிசை ஊழல் எல்லாம் சர்வ சாதரணமாகத் தெரிந்திருக்கிறது.
இந்த அரசியல் ஆரூடங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு தமிழ் தேசிய எழுச்சி தமிழகத்தில் எழும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஏற்கனவே, ஈழத் துயரம் ஒரு மிக முக்கியமான காரணமாய் மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் காவிரி பிரச்னையும் சேர்ந்து கொண்டால் தமிழகம் தனி நாடு கேட்கும் கோரிக்கை வலுப்பெறக்கூடும். தமிழை செம்மொழியாக்க திமுக நாற்பது எம்பிகளை வைத்து பேரம் பேச வேண்டியிருந்தது. சமஸ்கிருதம் ஏதோ தெய்வீக மொழி போன்று எப்போதோ செம்மொழியாக்கபட்டது.
ஆனால் அந்த நாற்பது எம்பிக்கள் பலம் ஈழப் போரை நிறுத்த பயன்படவில்லை. காரணம், திமுக ஆட்சி காங்கிரஸ் கட்சியின் தயவில் இருக்கிறது. இந்த வியாபாரம், பேரம் எல்லாம் வெளிப்படையாய் தெரிந்து போனதால், கருணாநிதி உண்ணாவிரதம் என்று உருகுகின்றார். இந்த பிரச்சனையில் அரசியல் குளிர் காய ஜெயலலிதா தயாராகி விட்டார். அவர் ஒரு பார்பானிய ஏஜென்ட் போன்று தமிழ் நாட்டில் தமிழனுக்கு சொரணை வராமல் பார்த்துக் கொள்வார். எது எப்படியோ இதுதான் அடுத்த தலைவர் வருவதற்கான நேரம்.
ஜெயலலிதா இலங்கை ராணுவம் தமிழ் தீவிரவாதிகளை எதிர்த்துதான் போராடுகிறது என்றும், புலிகளை ஒழித்தால்தான் அமைதி திரும்பும் என்றும் ராஜபக்சேவின் கொபசெ போல பேசிவிட்டு திடீரென தேர்தல் நேரத்தில் உண்ணாவிரதம் அறிவித்து தமிழர்களை திரும்ப மடையர்கள் ஆக்க தயாராகிவிட்டார். எல்லாம் நேரம். ஏதோ இலங்கை தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே ஆயுததாரிகள் வேடம் அணிந்தது போல தீவிரவாத எதிர்ப்பு கோஷங்கள் அக்குவாபினா-வால் தொண்டை நனைத்துகொண்டே நியாயம் பேசும் விவாத மேடைகளில் எழுப்பப்படுகிறது. ஈழத் தமிழர்களின் அறப்போராட்டங்கள் எந்த அளவுக்கு நசுக்கப்பட்டன என்பதை திடீரென திரையிட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.
மெஜாரிட்டி மக்கள் மைனாரிட்டி அடக்குமுறையை எதிர்த்து போராட வேண்டுமென்றால் மட்டுமே அறப்போராட்டம். மைனாரிட்டி மக்கள் மெஜாரிட்டியின் அடக்குமுறையை எதிர்க்க வேண்டுமென்றால் அதிரடிப்போராட்டம் தான். வேறு வழி இருப்பதாய் தோன்றவில்லை.
இர.ஜெ.பிரேம்குமார்
correct than…anaaa…captain vijayakanth a pathi onnume sollalaiyea….appuram namma sarthkumar…..
Comment by dap — March 9, 2009 @ 8:27 am |
Please read:
http://sivascutandpaste.wordpress.com/2009/03/04/%e0%ae%ae%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/
Comment by RJP — March 9, 2009 @ 10:32 am |
prem,tamil desiya aeluchi elum vaaippu irrukkirathu enkirai eppadi?yaaral?ingu nadakkum poratathai vaithu ippadi oru mudivukku vanthu vittaya?sari atha vidu tamizlagam thani naadu ketkum korikkai valupperum enkiraye yaar ketpathu?sari appadiye yaravathu kettalum intha soolnilayil thani nadu korikai thevaithana? korikkai eluppuvatho porattam nadathuvatho nichayam palan tharathu.Because indian unian is not a result of agreement of independent and sovereign states and the states don’t have the right to secede fromthe union.india is an indestructable union of destructable states.sari,adutha visayathukku varuvom ithuthan adutha thalaivar varuvatharkana neram enkirai?enkirunthu varrathu?illa vijakanthu sarathu karthikku ivangala sollraya?ivangallam congras kootani illama jeyikka mudiyuma illa thaninaduthan kettruvangala.ADMK DMK aliyappovathumillai,congres kootu illamal aatchi amayapovathumillai,nee solvathu pol oru thalaivar varapporathumillai,vanthalum thaninadu ketkapovathumillai,thaninadu kidaithalum thani ellam kidaikkappovathumillai(oru athangam than).MMM
Comment by muthumurugan — March 9, 2009 @ 3:24 pm |
முத்துமுருகன் அருமையா சொல்லிருக்கார். அவர் சொல்லிருக்க மாதிரி தான் நடக்கும்.
பிரேம் சொல்லிருக்கது போலவும் ஒருவித விரக்தியான சூழல் தான் மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனக்குள்ளும் ஒருவித ஆதங்கம், ஏன் படித்த இளைஞர்கள் ( லோக் பரித்ரன் போல் ) கட்சி ஆரம்பித்து, அதற்கு கலாம், ரஜினி ( ஒரு காலும் நடக்காது ) போன்றவர்கள் ஆதரவளித்து , தேர்தலில் போட்டியிடக் கூடாது!! அப்படி ஒருவேளை நடந்தால் நிச்சயமாக இன்றுள்ள சூழலில் பெருமளவில் வெற்றி பெறமுடியாவிட்டாலும் , கணிசமான ஓட்டுக்கள் நிச்சயம் வாங்கமுடியும். ஏன், வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. திராவிட , காங்கிரஸ் அல்லாத கட்சி தமிழகத்தை ஆள்வதை ஆயுளுக்குள் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் சமீப காலமாக வலுபெற்றிருக்கிறது.
Comment by Vivek — March 9, 2009 @ 11:09 pm |
மேற்சொன்னவற்றில் சொறி , சிரங்கு , சீல் படிந்த ஜாதி கட்சிகளும் அடக்கம்.
Comment by Vivek — March 9, 2009 @ 11:16 pm |
Muthumuruga…Superapu
Vivek bossu…neenga neraya Mani sir padam paapingala?
Comment by TVK — March 10, 2009 @ 5:12 am |
Muthu Murugan & Vivek,
Thanks for sharing ur athangams.
“India is an indestructable union of destructable states” right than.
But during previous Cauvery episode even after Supreme court ordered Karnataka Govt to give water to TN, Krishna Govt dare to stop it after a farmer committed suicide by diving into the river water. In that particular moment the entire Union Govt, State Govts & Supreme court were failed. That’s the indication that our political structure is weaker and it just requires a bad weather to collapse.
Separatism won’t benefit TN but that dimension would soon emerge if things are taking bad shape like the current scenario.
Aprom, about next leader no one is sure. But as per Sarkar film’s title “When the system collapses, a hero will emerge”. I was also under athangam that TN’s politics could not go worst than the present state and this should be the right time for the next leader, if there’s someone.
Comment by RJP — March 10, 2009 @ 8:01 am |
ithuku mani sir padamo, tharani sir padamo paakanumnu avasiyam illa. oru thadavai ulaga arasiyala nadantha maatrangala padichu paarunga puriyum!
Comment by Vivek — March 11, 2009 @ 1:42 am |