A l i e n s !

February 17, 2009

கொட்டிய முடியும், வெட்டிய நகமும் – By Kamali

Filed under: Kavithai, Literature, Tamil, Uncategorized — Aliens @ 9:21 pm
Tags: ,

Kamali Kavithai


என்னுடை
முடி, நகத்துணுக்கு, நான் கிழித்தெறிந்த வெற்றுத் தாள்கள், என் கூந்தலில் இருந்து விழுந்த பூஎன உயிரில்லாத அனைத்திற்கும், பொருளில்லாத செயல்பாட்டால், பொருள் பொதிய, என் அகம் வந்து விழுந்தவனே…. உனக்காக…. கொஞ்சம் நாள் தப்பிப் போனாலும்கொண்டு வந்து சேர்த்து விட்டேன்

கொட்டிய முடியும்,

வெட்டிய நகமும்,

உயிர் கொள்ளுமா?

என் உறவுகள் தளர்த்தி,

துறவெனக் கொள்ளும்

நிலையாகுமா?

நான் கிழித்த தாளும், - என்

முடி உதிர்த்த பூவும்,

பொருள் கொள்ளுமா?

என் தோள் மீது நீ சாய,

சுமையாகுமா?

சொல்லடா, என் மன்மதா? – இதுவே,

என் நிலைஎன்பதா?

மேகமிட்ட முந்தி தொட்டு,

வெண்ணிலவில் பந்தியிட்டு,

 நானறிந்தே களவு போனேன்மனசில்,

உன்னையிட்டு உழவு போனேன்.

என் பின்னலிட்ட சடையிரண்டும்,

முன் விழுந்து மார்மறைக்க,

என் பால்வீதி நடையினிலே,

என் புறம் போன பார்வைக்கு

உரம் என்னவோ நீயே

கால்கள் தடுமாறி, காதல் உளமார,

கண்ணா, தேம்புகிறேன்.

உனைப் பார்த்ததும், பூ போலக் கூம்புகிறேன்.

காதலென்று இப்படியும்

சில உண்டு.சிலபோது,

விதிக்கே வந்துவிடும் முரணுண்டு..

பொறுத்திருப்போம்.

அதுவரை,

எங்கோ படித்தது நியாபகத்தில்…..

“பூக்கள் சிந்தும் புன்னகைக்கும்,

புதிதாய் அர்த்தம் கொள்ளவைக்கும். 

நிகழும் சின்ன விசயம் கூட,

நினைவில் தொங்கிச் சிரிக்கவைக்கும்.

காதல் மட்டும் கொண்டுவிட்டால்,

அத்துணை கவிஞனும் பித்தனே,

உருவகஞ் செய்வதில் எத்தனே,

- கமலி

11 Comments »

  1. அடடா..
    கமலி பின்னிப் பெடலெடுத்து இருக்கடா..!
    படிச்சு முடிச்சும் சொட்டிகிட்டே இருக்குது..!

    எனக்கு ரொம்ப பிடிச்சது “பூ போலக் கூம்புகிறேன்”.
    அந்த சொல்லாடல் அருமை.

    Comment by RJP — February 17, 2009 @ 9:28 pm | Reply

  2. Kamaliyin kavithai , Migavum arumai

    Comment by sweetdsp — February 18, 2009 @ 10:36 am | Reply

  3. Yenaku oru unmai therinjaganum..Kamali is ur ‘punai peyar’… Chandramukhi madiri..yen kamaliyave maari kavithai yeluthirukee ???

    Comment by Kasiviswanathan.R — February 18, 2009 @ 11:03 am | Reply

  4. s prem poo pola koombugiraen , ithuvarai kelvi pattathe illa ,
    adikadi eluthu kamali , appo than aliensla aagum
    amali thumali , kamali kamali …

    Comment by udhaya — February 18, 2009 @ 11:16 am | Reply

  5. Kamali, Keep it up. Kamali can be referred to Vairamuthu.

    Comment by dinakaran — February 19, 2009 @ 1:38 am | Reply

  6. marriage mudinchi….rendu varusham aana pirahu…..appuramaa oru kolanthayum pethukittu…..maaripona muhatha paakkave manasillatha pothu….mudi kottunaa enna…?
    naham vettunaa enna..?

    Comment by dap — March 5, 2009 @ 9:02 am | Reply

  7. Dap,

    Sonna namba mattey..

    Onnoda comment-aey oru Kavithai :)

    Comment by RJP — March 9, 2009 @ 11:10 am | Reply

  8. illa naa namburaen prem :)

    Comment by Lal — March 9, 2009 @ 1:01 pm | Reply

  9. Ini kavithai eluthiravunga Itha padichitu eluthunga…

    http://www.sramakrishnan.com/view.asp?id=242&PS=1

    Comment by TVK — March 10, 2009 @ 5:11 am | Reply

  10. good TVK… i will accept… naanum padikka arambikkeran….

    “நட்ட கல்லை சாமியென்று நாலு புட்பம் சாத்தியே,
    சுற்றி வந்து முணு முணுவென சொல்லு மந்திரம் ஏதடா,
    நட்ட கல்லும் பேசுமோ?…நாதன் உள்ளிருக்கையில்.
    சுட்ட சட்டி சட்டுவந்தான், கறிச்சுவை அறியுமோ?.”

    Itha yeluthinavar yeththana book padichu irruparnu neenaikereenga TVK…

    bye,
    Kamali.

    Comment by kamali — March 11, 2009 @ 2:39 pm | Reply

  11. hi kamali , ne eluthite iru , bhuji paadu pathi s.ramakrishnan sonnathe sema aruvayai irunthathu , unoda adutha kavithaiya ethir parthu irukirom …

    Comment by udhaya — March 12, 2009 @ 3:49 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.