சன் டிவி டாப் டென் மாதிரி “ஸ்லம்டாக் மில்லியனேர் படத்த அளவுக்கு மீறி அலசியதால அடுத்த எடத்துல இருக்க படத்த பத்தி பார்ப்போம்”னுதான் நெனச்சேன். ஆனா நிறைய நண்பர்கள் இந்த படத்தைப் பத்தி ‘நீங்க என்ன நினைக்கிறீங்க’ன்னு கேட்டுகிட்டே இருக்கதால சொல்றேன். நம்பலைல..? கேட்கிறாங்கப்பா… ரைட் விடுங்க.. அப்றோம் உங்க இஷ்டம்.
ஒரு சில பேரு, நம்ம நாட்டை இப்படி மலக்காடா காட்டிபுட்டாங்கலே, இந்த வெள்ளைகாரங்கலே இப்பிடித்தான், இந்தியாவை முடிஞ்சவரை மட்டப்படுத்தி காட்டி நமக்கு நம்ம மேலேயே நம்பிக்கை போறமாதிரி பண்ணிருவாங்கே. இப்படி கேவலமான நெலமைல இருக்கமே, நம்மெல்லாம் என்னத்த முன்னேறப்போறோம்-னு நம்மளோட அவநம்பிக்கை வேர்ல தண்ணியூத்தி வளர்க்க முயற்சி செய்றமாதிரி இருக்கு இந்த படமும், அதுக்கு மேலைநாடுகள் கொடுக்கும் பரிசுகளும்.
ஒரு நண்பர் எழுதியிருந்தார் – ‘லகான்’ படம் ஏன் ஆஸ்கார் விருது பெறவில்லை என்றால் அதில் கடைசியில் இந்தியன் ஜெயித்து விடுவான்.
சரிதான் ! லகானில் இந்தியன் ஜெயிப்பான். ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ படத்தில் இந்தியா தோற்றுவிடும்.
மற்றுமொரு நண்பர் எழுதியிருந்தார். ஏன், அந்த படத்திற்கு ஆதாரமாய் இருந்த Q&A நாவலை எழுதியது ஒரு இந்தியன் தானே, அப்போது ஏன் நாம் எதிர்க்கவில்லை. நம் அசிங்கத்தை நாமே எழுதினால் சகித்துக்கொள்வோம், ஆனால் பிற நாட்டவன் சொன்னால் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அப்படித்தானே?
இப்படி சிறிதும் பெரிதுமான நிறைய சர்ச்சைகள்.
ஆனா எனக்கென்னமோ இந்த படத்தில் செய்ததைவிட பெரிய அவமானம், நமக்கு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-ஆல் ஏற்கனவே ஒரு இருபத்தைந்து வருஷம் முன்னாடியே தரப்பட்டுவிட்டது. ‘இண்டியானா ஜோன்ஸ் – டெம்பில் ஆப் டூம்’ என்ற படத்தில் இதைவிட கேவலமான முறையில் இந்தியர்களும் இந்தியாவும் சித்தரிக்கப்பட்டது. அப்போதும் நம்மவர்கள் ரோஷமாய் படப் பிடிப்பிற்கு இந்தியாவில் இடம் தர மறுத்தார்கள். அவர்கள் ஸ்ரீ லங்காவில் செட் போட்டு படமாக்கினார்கள். நமது அம்ரீஷ் புரி கூட இந்தியர்கள் கலையை கலையாய் பார்க்க தெரியாதவர்கள் என்றெல்லாம் சொல்லி அந்த படத்தில் காளி பூஜை செய்யும் கொடூரனாய் ஒரு வேஷம் கட்டினார். அந்த படம் நம்மவர்களை குரங்கு மூளையை, பாம்புகளை, தேள்களைச் சாப்பிடுபவர்கள், உயிர் பலி கொடுப்பவர்கள், அடி முட்டாள்கள், காட்டு மிராண்டிகள் என்றெல்லாம் காட்டினார்கள்.
ஸ்பீல்பெர்க் இந்த மாதிரி சித்தரிப்பை திட்டமிட்டு அரங்கேற்றினார். முதல் படத்தில் நாஸி படையினர் வில்லன்கள், அடுத்த படத்தில் இந்திய காட்டுமிராண்டிகள். படத்தில் வரும் அடிமைச் சிறுவர்கள் இண்டியானா ஜோன்சுக்காய் காத்திருப்பவர்கள். அந்த படத்தில் வெள்ளை கதாநாயகன் ஒரு மீட்பர். முழுக்க முழுக்க வெள்ளைகார நல்லவர்களாலும், இந்தியா முட்டாள்களாலும் நிரப்பப்பட்ட படம்.
அதோடு ஒப்பீடு செய்யும் போது ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ படம் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. படம் முழுக்க முழுக்க இந்தியர்களால் நிரப்பப்பட்டு இருக்கிறது. இந்திய நாவல் ஆசிரியர், இந்திய ஒளிப்பதிவாளர், இந்திய இசையமைப்பாளர், இந்திய நடிகர்கள் என்று பல அறிமுகங்கள் இந்தியாவிலிருந்து சர்வதேச சினிமாவிற்கு.
இதற்கு முன்னாள் டோனி போயல் எடுத்த சினிமாக்களில் வெள்ளையர்களை வீராதி வீரர்களாய் காட்டியிருந்தால் நாம் கோபப்படலாம். அவர் எடுத்து புகழ்பெற்ற ‘டிரைன்ஸ்போட்டிங்’ என்ற படத்தில் எடின்பேர்க் நகரின் ஹெராயின் போதைக்கு அடிமையாகும் அடித்தட்டு வேலையற்ற இளைஞர்களை தான் காட்டியிருப்பார். அந்த படத்திலும் முகம் சுளிக்க வைக்கும் டாய்லெட் சீன்கள் உண்டு. அவர் பிரிட்டனையும் கேவலமாகத்தான் காட்டினார், இந்தியாவையும் கேவலமாகத்தான் காட்டினார். இது தான் அவருடைய பாணி சினிமா. ஸ்பீல்பெர்க் அளவுக்கு இவர் திட்டமிட்டு இந்தியாவை கேவலபடுத்தியதாக எனக்கு தோணலை. அதனாலே அவர இந்தவாட்டி மன்னிச்சு விட்ரலாம். அடுத்தவாட்டியும் இப்படி பண்ணினா அப்புறோம் சபைய கூட்டி ஆகவேண்டியத பார்க்கலாம்.
இர.ஜெ.பிரேம்குமார்
Dude..your viewpoint was very good..But can we expect the review atleast in the next article..???
Comment by Kasiviswanathan.R — January 28, 2009 @ 1:18 pm |
Kandipa Kasi,
Nee ketta thara mattena..?
Comment by RJP — January 28, 2009 @ 1:29 pm |
படத்தைப் பற்றிய விவாதத்திற்கான இடப்பரப்பை அதிகப்படுத்தியுள்ளிர்கள். உங்கள் பணிக்குப் பாராட்டுக்கள்!
Comment by Jay Mahadevan — January 28, 2009 @ 8:36 pm |
படம் ஆஹா ஓஹோனு எல்லாம் இல்லை. நெறைய ஓட்டைகள். சேரி’ல பிறந்த, படிக்காத , மும்பைல இருக்கிற வரைக்கும் ஹிந்தி மட்டுமே பேசிட்டு இருக்க சிறுவர்கள். டெல்லி போன உடனே பிரிட்டிஷ் உச்சரிப்புல இங்கிலீஷ் பேசுறது எப்படின்னு தெரியல!!
அதே மாதிரி அமிதாப் வரைக்கும் ஏன் இந்த படத்தை எதிர்கிறாங்கனு புரியல?! இதே மாதிரி காட்சிகள் எத்தனையோ இந்திய சினிமாக்கள்’ல வந்திருக்கு! நம்ம செல்வராகவன் காதல் கொண்டேன், புதுப்பேட்டை’ல இதே அளவுக்கு காட்டிருப்பார்!!
மேற்கத்திய படங்களுக்கு , இது ஒரு வித்தியாசமா இருக்குறதுனால விருதுகள கூப்டு கூப்டு குடுக்குராயிங்க போல!
எது எப்புடியோ ஒரு தமிழனுக்கு விருது கெடைக்கிறது பெருமையான விஷயம் தான் . அதுனால நெறைய குடுக்கட்டும்!!
Comment by Vivek — January 29, 2009 @ 12:24 am |
ஜெய் தங்களது வாசிப்பிற்கும், கருத்துக்கும் நன்றி..!
விவேக் உங்களோட கருத்து சரிதான்.
அமிதாப் இதுவரை எத்தனை நாள் சேரி பக்கம் போயிருப்பார்?
நல்லதோ கெட்டதோ டேனி போயல் ஒரு வருஷம் சேரிப்பக்கம் வாழ்ந்திருக்கிறார்.
சேரி காற்றை சுவாசித்து இருக்கிறார்.
Comment by RJP — January 29, 2009 @ 9:21 am |
Prem,I thought of writing a review for this film.But when I read this http://www.rediff.com/movies/2009/jan/29is-slumdog-worth-it.htm
everything I wanted to say was already there.
A.R.Rahman itha vida nalla music neraya padathula potrukaru….English karen eduthanra orey karanathukahathan itha kudukira mari iruku…
Frankly the movie was not even better than a Shankar movie.Ithey storya Shankar kita kuduthiruntha kooda nalla eduthirupan pola….
Comment by TVK — January 30, 2009 @ 1:54 am |
Nice review.
“…………..
Before seeing the movie, I thought those who claimed that it portrayed India in a negative light were being ridiculously defensive. Having seen it, I understand where they are coming from. Yes, Mumbai has squalor and violence and cruelty. But it has great humanity and brotherhood and character, none of which were adequately represented in the film.
One of the first negative reviews of Slumdog I read was from the blog The Great Bong, who absolutely lacerated it. In it, the blogger wrote, “Well yes these things do happen in India. However the problem is when you show every hellish thing possible all happening to the same person. Then it stretches reason and believability and just looks like you are packing in every negative thing that Westerners perceive about India for the sake of crowd pleasing.”
Comment by RJP — January 30, 2009 @ 9:56 am |
Yes Prem, Seeing the film I was reminded of Chandrasekhar in tamil movies.Villains would cut his limbs rapehis wife and sister,everything horrible would only happen to him.
I also fail to understand why all childood friends/brothers get lost only while catching a running train or how they would be reunited by singing Nalaiy namathey….
If they decide to nominate this for oscars then we should all encourage Perarasu to direct a movie in a 50 million dollar budget.
Comment by TVK — January 31, 2009 @ 1:08 am |
Ha ha haa..
Comment by RJP — January 31, 2009 @ 1:28 pm |
TVK..nee nattamai padam parthathilunthu…Oruthan yenna naadu,mozhi ippadi yethayum parkaaama paraatcham illama theerpu velangare..good
))
Have a question..Oru director unnaya santhosapaduthanumna appadi yenna thaanda pannanum ????.
)))
Comment by Kasiviswanathan.R — February 2, 2009 @ 2:05 pm |
arikira edam ellam sorinju vidanum..
Comment by RJP — February 2, 2009 @ 8:08 pm |
vesa comedy da prem
Comment by udhaya — February 3, 2009 @ 4:40 am |
Ipo namma ethu sonnalum otuvainga kasi….so itha apuram deal panuvom…:-)
Comment by TVK — February 5, 2009 @ 2:04 am |
கலை சார்ந்த, அடிப்படையான மனித இயல்புகள் சார்ந்த விஷயங்களை திரைச் சலனங்களில் படம்பிடித்துக் காட்டு : But donot illustrate that all Indians,towns, villages, people are in the same condition; Do you think that there is no begger in England: but not so many as in India: this is due to the POLITICAL SLUM DOGS
I request the cinema people must show the otherside of these politicians to the world:
Comment by A.Ramasamy — February 5, 2009 @ 2:12 am |
Sitharum Sandegangal yezhuthiya yenadhu arumai nanbar bilal pathi yaaraachum yedaachum solla virumbureengalaa ?
Comment by Lal — February 5, 2009 @ 6:40 am |