A l i e n s !

January 27, 2009

சாகாதவரை உண்ணாவிரதம் – By RJP

Filed under: Politics, Tamil — Aliens @ 2:45 pm
Tags: , ,


திருமாவளவன் செய்த மிகவும் கேவலமான செயல் அவரது
ஈழத்தில் போர் ஓயும்வரை, சாகும் வரை உண்ணாவிரதம்அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த காமெடி நிகழ்வுகளும். டாக்டர் ராமதாஸ் நாடிச் சென்று நாடித்துடிப்பை பரிசோதிப்பது போல நடித்து ஹ்ம்ம்.. இந்தவாட்டி இவ்ளோ போதும், மிச்ச ஆட்டத்தை அடுத்த தடவை ஆடிக்கலாம்னு ரேஞ்சுக்கு எதையோ பேசி முடித்துவைத்தார்.

கருணாநிதி “என்கிட்ட நேத்து நல்லாதாம்பா பேசிட்டு போனாங்க.. அங்க போயித் திடீர்னு உண்ணாவிரதம்னு சொல்லிடாப்ள.. இவங்க ஈழத்தில் போரை எதிர்க்கிறாங்களா, இல்லை காங்கிரஸ்காரனை எதிர்க்கிறாங்களானு தெரியலை”னு அழுகிக்கொண்டிருக்கும் அரசியல் மூளைக்குள் இருந்து திசை திருப்பும் பாணத்தை வீச, டீக்கடை அரசியல்வாதிகளுக்கு தீனி கிடைத்தது. தொடர்ந்தே வந்தது “தமிழனுக்காக என் உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டேன்”. இத இவரு எத்தன ஆயிரம் தடவை சொல்லிருக்காருன்னு ஒரு PhDயே பண்ணலாம்.

அப்புறம் வழக்கம் போல சில பஸ்களை எரித்தார்கள். சிங்கள வெறியர்கள் தமிழ்நாட்டுக்கு வரநேரிட்டால் அவர்கள் செய்திருக்க வேண்டிய நாச வேலையை இவர்களே செய்தார்கள். கலைஞர் கண்டதும் சுட உத்தரவு போட்டது பஸ்களை காப்பாற்ற அல்ல. தனது பண்பட்ட தலை சிவக்க சிவக்க கொதிக்கும் தங்கபாலுவின் கோபத்தை தணிக்க.

இதனால் ஆனது என்ன? திருமாவளவன் இதுவரை அவ்வாறு உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொண்ட அனைவரின் தியாகத்தையும் மிக கேவலமான முறையில் கொச்சைப்படுதியதுதான். அவரால் நிகழ்த்தப்பட்ட அவமான நிகழ்வின் உச்சம் காசி ஆனந்தனை இவரது இழிசெயலை துவக்க அழைத்தது. ஈழ ரத்தத்தில் வீரன் வேஷம்கட்ட இனிமேலும் முயல வேண்டாம். உங்களுக்கெல்லாம் வேற எதாச்சும் பிரச்சனை வசமா மாட்டாமலா போயிரும்?

இர.ஜெ.பிரேம்குமார்

2 Comments »

  1. not my cup of tea :)

    Comment by Lal — January 28, 2009 @ 2:27 pm | Reply

  2. Nee coffee thane kudipey Laal..?

    ;)

    Comment by RJP — January 28, 2009 @ 4:29 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.