பஸ் ஸ்டாண்ட் ஓரமா ரொம்ப நேரமா நிற்க நேர்ந்ததால சுத்தியுள்ள மனிதர்களை நோட்டம்விட நேரம் கிடைத்தது.
எல்லோரடைய கவனத்தையும் ஈர்த்தது ஒரு கைக்குழந்தை. ஆனால் அந்த குழந்தையின் கண்களோ ஒரு பொக்கைவாய் கிழவனை நோக்கியிருந்தது. அவரை பார்க்க அது அடிக்கடி தலையை சாய்க்க, ‘அந்த பக்கம் யார்’ என பார்க்கும்விதமாய் திரும்பினாள் அந்த தாய்.
அப்போது அந்த குழந்தையும், கிழவனும் பரஸ்பரம் ஒரு புரிதலுக்கு வந்திருந்தார்கள். அவர் குழந்தையை கவரும் முகக்கோணலை முயல, அது பதிலுக்கு தனது பொக்கை வாயை காட்டிச் சிரித்தது. திரும்பிப் பார்த்த தாயிடம் என்ன செய்வது என்று புரியாமல் கிழவன் ஒரு புன்னகையை சிந்த, “தாத்தாடா…”, என்று குழந்தைக்குச் சொல்வதுபோல சொல்லி, புன்னகையுடன் திரும்பிக்கொண்டாள்.
அப்போது ‘ஏன் குழந்தைகளுக்கு வயதானவர்களையும், வயதானவர்களுக்கு குழந்தைகளையும் பிடிக்கிறது?’ என்ற சந்தேகம் வந்தது.
பக்கத்தில் இருந்தவர் பஸ் வராததால் பொறுமை இழந்து, “ஏன் சார், ஒருவேளை இன்னைக்கு பஸ் ‘ஸ்டிரைக்’கோ..?”
“இல்ல சார், அந்தப்பக்கம் இருந்து ஒரு பஸ் போச்சு, கண்டிப்பா பஸ் வந்திரும்”.
எனது சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது போலத்தான் தோன்றியது.
இர.ஜெ.பிரேம்குமார்
நல்லா இருக்கு!
எனக்கு ஒரு சந்தேகம்! கடைசியில bus வந்திச்சா இல்லையா ? (Rascals இந்த பஸ்ஸ வச்சு எழுதுறத நிப்பாட்டல… பிரச்சனை பெருசாகும்!)
Comment by Lal — January 28, 2009 @ 2:25 pm |
Surrutai,
Inga oruthan Bus-a pathi thappa pesitaan..
Ennanu kavani..
Comment by RJP — January 28, 2009 @ 3:35 pm |
Prem..actually this is a Mokka sirukathai..
Apparam naan yennave thethikitten..Irukathu ithu namma prem yeluthirikan..yethavathu punch irunthirikum..namakku thaan puriyala polenu…
))
Apparam surutai…venam valaya virukaraanunge…konja naalaiku naama busa maranthiruvom okya..
)))
Comment by Kasiviswanathan.R — January 29, 2009 @ 8:38 am |
Kasi,
Thanks for ur frank comment..
Experiment panrapo ithellam sagajam..
Comment by RJP — January 29, 2009 @ 9:16 am |