From the creator of “சீய்.. ஆய்..” – 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும். – கமலஹாசத்தனம்.
காலேஜ் முடிச்சுட்டு உடனே வேலைக்கு போனா அது ஒரு டேஸ்ட். முடிச்சுட்டு வேலை தேடி அலையுறது அது ஒரு டேஸ்ட். முடிக்காம அரியர்ஸ் வைச்சுட்டு க்ளியர் பண்ற வரை சொந்த ஊர்ல சுத்துறது பெரிய டேஸ்ட். இது அப்படி ஒரு பெரிய டேஸ்ட் பத்தி..
எனக்கு ஊருக்குள்ள ஒரு சின்ன வீடு இருக்கு, அடாடா, ஆரம்பமே சரி இல்ல. நீங்க தப்பா புரிஞ்சிக்க வாய்ப்பு இருக்கு. எங்க குடும்பம் கூட்டு குடும்பங்க. ஆனாலும் ஒரு சின்ன வீடு இருக்கு. அதுல தேவையில்லாத எல்லா சாமானும் போட்டுவைச்சுருந்தோம். அந்த வீட்டில ஒரு B&W டி.வி, ஒரு கட்டில், ஒரு டாய்லெட், பாத்ரூம் எல்லாம் இருக்கும். அந்த வீட்டில பெரும்பாலும் நான் மட்டும்தான் இருப்பேன். என் சந்தோசம், கவலை, காமம் எல்லாமே அந்த கட்டில்.
விடிய காலை பத்து பத்தரைக்கு எந்திரிச்சதும், வாய் மட்டும் கொப்புளிச்சிட்டு, நேர போய் ஒரு டீ, வடை சாப்பிட்டு, அப்டியே பக்கத்துல இருக்குற லைப்ரேரி-க்கு போயிருவேன் (அட நம்புங்கப்பா). அங்க போகனும்னா வழக்கமா வார ஒரு தாத்தா வாரதுக்குள்ள போயிரனும். இல்ல, அவருக்கிட்ட போன ஹிந்து பேப்பர் வரவே வராது. அந்த காலத்திலே ரொம்ப படிச்சவராம். லைப்ரேரி மூடுறவரை அங்கதான் இருப்பேன்.
சொல்லாம இருக்கமுடியலைங்க. ப்ரென்ட்ஸ் யாருக்காச்சும் பிறந்த நாள்னா அங்கிருந்துதான் ஒரு நல்ல புத்தகமா பாத்து அனுப்புவேன். லைப்ரேரியன் என்கிட்டதான் புலம்புவாரு. “நேத்து ஒரு அம்மா வந்து சிவகாமியின் சபதம் ரெண்டாம் பாகம் குடுத்துட்டு மூன்றாம் பாகம் கேட்டுச்சுப்பா. எனக்கு நல்லா தெரியும், யாருக்கும் அந்த புத்தகத்த டோக்கனுக்கு கொடுக்கல. ஆனாலும் காணல. பாருங்க தம்பி, அடிக்கடி புக் காணாம போயிடுது”.
“நீங்களும் கொஞ்சம் கவனமா இருக்கனும் சார்”னு ஆறுதல் சொல்லிட்டு ரெண்டாம் பாகத்த எங்க வைச்சுருக்காருனு பார்த்துட்டு வந்துருவேன். தொந்தி இருக்குறது சில சமயத்துல யூஸ்ஃபுல்லா இருக்கும். புக் வயித்துல கரெக்ட்டா ஃபிட் ஆகும். ஒரு தடவ, ஷேவ் பண்றப்போ கன்னத்துல க்ரீம் பிதுக்கி வைச்சிட்டு பிரஷ் எடுக்க நகர்ந்தேன். கன்னத்துல இருந்த க்ரீம் விழுந்திருச்சு. “சே.. ”னு நெனைச்சேன். அப்போ தொப்பைல சில்லுனு இருந்துச்சு. என்னை அறியாம கண்ணு கலங்கிருச்சுங்க. அந்த பக்கமா போன முத்து சொன்னான் “பெரிய ரேடியோ விழுந்தாகூட அது தரைய பாக்காது”.
சரி. விஷயத்துக்கு வாரேன். மணி ஒன்னு ஆயிடுச்சு. அடுத்து சாப்பாடுதான். நல்லா சாப்பிடுவேன். “ஏன்டா, மாமாக்கு பயோ-டேட்டா அனுப்பவேண்டியதானாடா” – இந்த சவுண்ட் அம்மாட்ட இருந்து. “ஓஞ்சோட்டு பயதானே, விவேக்கு, வேலைக்கு போயிட்டான்ல, இன்னும் எத்தன நாளைக்கு.. ”. அதுக்குள்ள ரசத்துக்கு வந்தாச்சு. “உனக்கு எத்தனதடவ சொல்லியிருக்கேன். அவன் திங்க வாறப்போ எதுவும் சொல்லாதேனு” – இது அக்கா.
“நீ சும்மா இரு. திங்க மட்டும்தான் அவன் இங்க வரான். அப்புறம் அந்த வீட்டுக்கு போய் கதவ சாத்திக்கிறான். பேய், கீய் பிடிச்சுபோச்சானு தெரியல”. ஆனா அவங்க யாருக்கும் எனக்கு அரியர் இருக்க மேட்டர் தெரியாது – என் பெரியம்மா தவிர.
சாப்பிட்டு திரும்ப ரூமுக்கு போய் கதவ சாத்தினப்பறம் அந்த இருட்டுள மனசு கவலைக்கும், காமத்துக்கும் நடுவில போராடிகிட்டு இருக்கும். குழம்பிபோன மனசில பல பெண்களோட உருவம் வந்துபோகும். அதுல ஈஸ்வரினு ஒரு ஆன்ட்டி எங்க பக்கத்து வீட்லயிருந்து மாறிபோயிட்டாங்க.
அவங்க என்கிட்ட நல்லா பேசுவாங்க. நானும் நல்லாதான் பேசுவேன். எந்த கெட்ட எண்ணமும் வராது. அன்னிக்கு அத பாக்கனும்னு தோணுச்சு. கையில 1st செமஸ்டர் maths புக் (ஃபாதர் கையில பைபிள் மாதிரி இருக்கும்) எடுத்துட்டு போனேன்.
“வா உதயா, என்ன நல்லா இருக்கியா?”. எனக்கு வார்த்தையே வரல்ல. “நல்லாஇருக்கேன்”. “சொல்லுப்பா என்ன விஷயம்?”. “இல்லக்கா, இந்த புக்-அ வைச்சிருங்க, நான் ப்ரெண்ட்-அ பாக்க போறேன். வரும்போது வாங்கிக்றேன்”னு சொல்லிட்டு நேர வீட்டுக்கு வந்து தூங்கிட்டேன். அடுத்த நாள் மதியம் பேசிக்கிட்டு இருக்கும்போதே “அக்கா நீங்க அழகா இருக்கீங்க”னு சொல்லிட்டேன். அவங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்க.
அப்போ 5 ஸ்டார் படம் ரீலீஸ் ஆயிருந்தது. அதுல வந்த “ஈஸ்வரி, உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்” பாட்ட பாடிகிட்டே இன்னொரு நாள் மதியம் போனேன். அப்போ அவங்க வீட்டுக்கு 2,3 பொண்னுங்க வந்திருந்தாங்க. அந்தக்கா என்ன கோபமா பாத்த மாதிரி இருந்தது. ஒன்னும் சொல்லாம வீட்டுக்கு வந்து படுத்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு என் ப்ரெண்ட் கதவ தட்டினான்.
“என்னடா உள்ள வா”ன்னேன்.
“ஈஸ்வரியக்கா உன்னய அந்த பக்கம் வரவேணாம்னு சொல்லிச்சுடா. சரிடா, நான் ஈவினிங் வாரேன்”
தூக்கம் போச்சு. காமம் போச்சு. ஃபேன் சத்தம் பிடிக்காம நிறுத்திட்டேன். ரொம்ப அமைதியாய் உதடு அசையாம பாட்டு வந்தது.
“ஈஸ்வரி, உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்டேன்
ஈஸ்வரி, இனி உங்க வீட்டுப்பக்கம் வரவே மாட்டேன்”
அ.உதயகுமார்
0 A
0 0 à U K
ஒரு நல்ல சிறுகதை படிச்ச மனநிறைவுடா…
நேர்மையான படைப்பு எத்தனை தடவை படிச்சாலும் அழுக்காது.
நகைச்சுவை எழுத்து உனக்கு இயல்பான நடையில வருது.
யாரென்ன சொன்னாலும் இதை உன்னோட பாணியா வைச்சக்கோ.
Comment by RJP — March 27, 2008 @ 4:50 pm |
Udhaya – Arumaida.
Comment by Prakash@IP — March 27, 2008 @ 10:44 pm |
Ada poda….
‘A’ certificate la postuku munadi pota odaney nee antha roomkula enna enna kalavani thanam panna-nratha intha ulagathuku solla poranu nenachen…..
Paatha Aanantham serial maari aakitingaleyda….
ithuku ethukuda ‘A’ certificate?
Aaana thopai comedy superda….
Comment by TVK — March 27, 2008 @ 11:46 pm |
Un manasu perusu!
Un thoppaium perusu! Appudiyae nee yen bikela pinnadi ukaanditu varrapa.. naa cushion maadiri adha yethana thadava use panniruppaen!? hmm!!
Article super!
Comment by Lal — March 28, 2008 @ 6:05 am |
ithuku ellam nama editor prem thangaya kaaranam , nan valavalanu neraya eluthi irunthaen , oru cutting oru otting panni alagu paduthitaru ,
appuram innonu sollanum , prem oru short film eduthurukan , neraya peru paathuruka maatinga , athula enaku romba aachiriyamana visayam ennana , shootinge appo puthu visayam , athula editing pati ethuvume theriyama ulead nu oru s/w use pani romba alaga edit pannirupan ,
oru padaipaliku romba mukiyam , entha visayatha sollavaramo , atha romba theliva sollurathu , visayam nama kita nerya irunthalum , itha matum sonna pothumnu avan manusukulaye oru editor iruntha matum than mudium , nama site editor prem ku athu neraya iruku
Comment by udhaya — March 28, 2008 @ 9:58 am |
Maths Book Bible ah, Hmm.. Ethuku intha Uvamai, Udayarae…
Comment by Gnans — March 28, 2008 @ 10:02 am |
Overa pugazhrannae..
Konjam beethiya than iruku..
Comment by RJP — March 28, 2008 @ 10:04 am |
Udhaya.. super article!! mix of all emotions/feelings.
Comment by arunachalam — March 28, 2008 @ 10:59 am |
From: ram krishnan
Date: 2008/3/28
Subject: Re: hello sir
To: udhaya kumar
அன்பிற்குரிய உதயகுமாருக்கு
உங்கள் கட்டுரைய வாசித்து பார்த்தேன். உங்களை சுற்றி நடப்பவற்றை இயல்பாக எழுதும் திறன் உங்களிடமிருக்கிறது. வாழ்த்துக்கள் நீங்களும் விருதுநகர் என்பது கூடுதல் சந்தோஷம்.
மிக்க அன்புடன்
எஸ்.ராமகிருஷ்ணன்
——————————–
On 3/28/08, udhaya kumar wrote:
unga kita eanku pudichathu unmaiyana unarvoda athuketha maathiri uvamaiyoda sollurathu sir ,
ennoda friend birthday ku gifta unga Thunai ezhuthu booka library la irunthu suttu kuduthaen sir ,
thapu than ippo velai kedachiruchu ,
konjam panam sambathika vaaipu iruku ,
nan konjam books vaangi library ku kudthuruvaen
i m udhaya kumar , i wrote one article please read this and awaiting for your valuable comments sir
http://www.aliensofnec.wordpress.com
nandri
aa.udhaya kumar
Comment by aliensofnec — March 28, 2008 @ 12:00 pm |
kalakiteenga mr. prem
Comment by Karthick Paypal — March 28, 2008 @ 12:56 pm |
உதயா
தமிழ் ல தெளிவா , ஒரு உரைநடை ஓட எழுதுறது ஒரு கலை.
அது உனக்கு நல்லாவே வருது. ஆனா….உன்னோட எழுத்துல பிரேம் (சிபு) வாடை கொஞ்சம் அடிக்குது ….( அல்லது பிரேம் எழுத்துலே உதயா தெரியறான்) படிக்கும் போது பிரேம் பேசுறது போல இருக்குது….உவமை ரெண்டு பெரும் ஒரே மாதிரி கையாளர மாதிரி இருக்குது……
anyhow article is too gud….i liked this very much.
Comment by dap — March 28, 2008 @ 1:07 pm |
Athu vera onnumilla DAP…
Romba naala friends-a iruka ellaroda effect-um enmela iruku..
Comment by RJP — March 28, 2008 @ 1:13 pm |
enakku ennamo .. padam interval vitta maathiri irukku … hero kku ippo velai kidaichuduchu, heroine innam uyiroda thaan irukkanga …
Comment by Kannappan — March 28, 2008 @ 1:27 pm |
illaye dapu , ippellam prem ta vaada adikurathu illaye , sivasuta than innamum adikuthunu
pona vaaram arun sonnan , manusana porantha mannula pora varaikum vaada adikathana seium , mmm , vadai poche!!!
Comment by udhaya — March 28, 2008 @ 1:52 pm |
hi kannaps , eppudi iruka , enga iruka , mail pannnu da, udhaya.mona@gmail.com
Comment by udhaya — March 28, 2008 @ 1:54 pm |
Ippo mattumilla da..
Eppaium enkitta irunthu vaadai adichathilla…
Varusathuku rendu-vatti kaaichal than adichathu…
Comment by RJP — March 28, 2008 @ 2:15 pm |
dei udhaya, sooper-a irukku da. seri, adhu yaaru “mona”?
Comment by Kirubakaran — March 28, 2008 @ 2:22 pm |
இந்த மொக்கை யா எதிர் பார்த்தது தான் …..
Comment by dap — March 29, 2008 @ 4:07 am |
Do we have members below 18 as well ?
Comment by Sankar — March 29, 2008 @ 4:18 pm |
Udaya,
you can give a try “Five point someone – NEC version” book in Tamil.
/Karthik
Comment by Karthik — March 30, 2008 @ 4:35 pm |
Really it is a nice article.
I used to read “Kumudam” and “Ananda Vikatan” every week without fail. Nowadays I don’t find time in reading, but I got the same feeling while reading this article.
Comment by Sankar — March 31, 2008 @ 9:13 am |
Nalla irunthuchu da.. neraya unmaiya sollanumnu aasai paduraen..aana nee solla venamnu thadutha thaala sollala
… velipadiya ezhuthurathuku oru periya salute!
Comment by Vivek — March 31, 2008 @ 3:44 pm |
udaya nalla irinthuchu
adutha post eppo
appapa unmai sollura good
Comment by thaya — April 1, 2008 @ 8:45 am |
udaya writing nallarukkuda,aana vishayam? first etho solla varramathiri irrukku kadaisila patthu paer sernthu oru varama payangarama plan panni kadaisila oru vuluntha vadai thiruduna mathiri aayiduchu.kaamamnrathu kaara thorathura naai mathirinu sollirukka aana ellam kuriyidave irrukkuda ithu kavithaikkum cinimavukkum nalla irukkum aana?
ithu nalla muyarchida keep it up.
MMM
Comment by MMM — April 7, 2008 @ 8:45 am |